கொல்லம்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும்: கடையநல்லூரில் நடந்த தமுமுக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் யாகூப் தலைமை தாங்கினார். தமுமுக மாவட்டச் செயலாளர் முகமது பாசித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, பொருளாளர் அப்துல் காதர், மாவட்டத் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், மாவட்டச் செயலாளர்கள் மஜீத், ஷேக், ஷாஜகான், செய்யது அலி, திவான் மைதீன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலச்செயலாளர் மைதீன் சேட் கான் கலந்து கொண்டார்.
பொதுக் குழு கூட்டத்தின் போது நிர்வாக தேர்தல் நடந்தது. இதனை தேர்தல் நடத்தும் அதிகாரி திருவை செயயது கலந்து கொண்டு தேர்தலை நடத்தினார் .
இதில் புதிதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவராக முகம்மது யாகூப், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக தென்காசி சலீம்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளராக புளியங்குடி அப்துர் ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளராக கடையநல்லூர் முகம்மது பாசித் ஆகியோர் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரி அருகில் மாவட்ட சட்டக் கல்லூரி , வேளாண் கல்லூரி மற்றும் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
கடையநல்லூர் அட்டைகுளம் மேல் புறத்தில் உள்ள மந்தை புறம்போக்கில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக உழவர் சந்தை அமைக்க வேண்டும், கொல்லம் திருமங்கலம் நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும்.
தென்காசியில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ், வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ், நெல்லை தாம்பரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். செங்கோட்டையிலிருந்து மும்பைக்கு வாராந்திர ரயில் இயக்க வேண்டும் என்பன் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கடையநல்லூர் நகர தலைவர் முகமது பஸ்லி நன்றி கூறினார்.
