கோபிசெட்டிபாளையம், மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகுசவாரி இல்லத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்க ரூ.12இலட்சம் மதிப்பீட்டில் மேற்கூரைகள் அமைக்கும் பணியை முன்னாள் அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதனைதொடர்ந்து கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட வார்டுகளில் ரூ.55 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால், சிறுபாலம் அமைத்தல், கான்கீரிட் தளம் அமைத்தல் என பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
CATEGORIES Uncategorized