கோவில்பட்டியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வ.ஊ.சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கான மராத்தான் போட்டி நடைபெற்றது.
இப் போட்டியானது வ.ஊ.சி பள்ளி முன்பு தொடங்கி பாண்டவர்மங்கலம் சாலை வழியாக விஜயாபுரி வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கான நடைபெற்ற இப் போட்டியில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆண்கள் பிரிவில் முதலிடத்தை லிங்ககுமார் என்ற மாணவனும் 2 இடத்தை இம்மானுவேல் மற்றும் 3 இடத்தை முகேஷ் என்ற மாணவனும் பெற்றனர் தொடர்ந்து பெண்கள் பிரிவில் 1 முதல் இடத்தை கோகிலா என்ற மானவியும் 2 இடத்தை சங்கீதா என்ற மானவியும் 3 இடத்தை ராதிகா என்ற மாணவியும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கயத்தாறு ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கராஜா பரிசுகள் வழங்கினார்.
CATEGORIES தூத்துக்குடி