BREAKING NEWS

கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை

கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ டிரைவர் வெட்டி படுகொலை

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி NGO. காலனியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மாரிச்செல்வம்(31). இவர் கோவில்பட்டி ரெயில்வே நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலையில் ஆட்டோ டிரைவர் மாரிச்செல்வம் சண்முகா நகர் சுடுகாட்டில் வெட்டுப்பட்ட ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
TAGS