BREAKING NEWS

கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி  வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் மற்றும் புதூர் வேளாண் வட்டாரங்களில் கடந்த 2020-2021 சுமார் ஒரு 1.40 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்களில் உளுந்து, பாசி,கம்பு, மக்கா, சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், மிளகாய் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிட்டனர்.

 

பெரும் மழை காரணமாக மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்தனர்.

 

 

பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு இழப்பீடு கேட்டு பல்வேறு போராட்டம் நடத்தினர். பெரும்பாலான பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மிளகாய்க்கு பயிர் காப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் மிளகாய் சாகுபடி விவசாயிகள கவலை அடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் மிளகாய்க்கு பயிர் காப்பீடு இழப்பீடு கேட்டு புதூர் வேளாண் விரிவாக்க அலுவலகத்தை கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் வரதராஜன் தலைமையில் வட்டார விவசாய சங்க தலைவர் சேதுபாண்டி, விவசாய சங்க நிர்வாகிகள் ஆதிமூலம், சுந்தர், வேலுச்சாமி, பால்ராஜ், பால்ச்சாமி, பிரசாத், பெருமாள்சாமிசூரன் குடி முன்னாள் ஊராட்சி தலைவர் சாத்தையா, என ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு கேட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 

 

பின்னர் அலுவலகத்திற்குள் சென்று வேளாண்மை உதவி இயக்குநர் சின்னப் பொன்ணுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வியாழக்கிழமைக்குள் பயிர்காப்பீடு வழங்கப்படும் என சின்னப் பொன்னு தெரிவித்தார். அதனையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )