சங்கரன்கோவிலில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை கூட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாடா பிள்ளையார் கோவில் அருகே இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்,
சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து சமுதாய ஏழை, எளிய மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும்,
சங்கரன்கோவில் நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பன்னீர்செல்வம்,
தாலுகா துணை செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன், மாநில குழு வீரபாலன், மாவட்ட செயலாளர் காளியப்பன், விவசாய சங்க மாவட்ட தலைவர் அய்யனார், சிவகிரி வட்டாரச் செயலாளர் வைரமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் புளியங்குடி நகரச் செயலாளர் காமராஜ், நிர்வாகிகள் பெருமாள் சாமி, தாமோதரன், கருப்பசாமி, ராமச்சந்திரன், பாரதி, திருமலை குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.