சாக்கு பையிலேயே முளைத்த நெற்கதிர்கள்; மழையால் வீணான ஆயிரம் டன் நெல் மூட்டைகள்: விவசாயிகள் கண்ணீர்!

மதுரையில் கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழையின் காரணமாக போதிய பாதுகாப்பின்றி தார்ப்பாய்கள் போட்டு மூடப்பட்டு, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து வீணாகியுள்ளது.
மதுரை மாவட்டம், தோப்பூரில் அமைந்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெற்கதிர்கள், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. அத்தகைய பிரம்மாண்டமான இடவசதியை கொண்ட மிகவும் முக்கியமான சேமிப்பு கிடங்காக இது திகழ்ந்து வருகிறது.
CATEGORIES மதுரை