BREAKING NEWS

சினிமா

ரஜினி ஹேப்பியோ ஹேப்பி..! “ஐ லவ் யூ மா..!” சூசகமாய் மனைவிக்கு காதல் சொன்ன தனுஷ்..

மகளும், மருமகனும் மீண்டும் சேர வேண்டும் என்ற ரஜினியின் வேண்டுதல்கள் பலிக்கத் தொடங்கியுள்ளது..

ரஜினி என்ற மந்திர வார்த்தைக்கு திரையுலகிலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் எப்போதும் ஈர்ப்பும் மரியாதையும் உண்டு. சினிமாவில் 70 வயதைக் கடந்தும் வெற்றியை மட்டுமே ருசித்து வரும் ரஜினிக்கு, குடும்ப வாழ்கை இந்த வயசான காலத்தில் வலிகளை தருகிறது. முதலில் மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து அவருக்கு கவலை தந்தது. ஒரு வழியாக அவர் மறுமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியோடு இருக்கிறார். ஆனால் மீண்டும் ரஜினிக்கு இடியாய் இறங்கியது, ஐஷ்வர்யா – தனுஷின் விவாகரத்து முடிவு.

அவர்களை எப்படியும் சேர்த்துவைக்க வேண்டும் என்று ரஜினி பலமுறை சேர்த்தும், தனித்தனியாகவும் பேசிப் பார்த்தும் பலன் இல்லை. பிரிவு முடிவை அவர்கள் பகிரங்கமாக அறிவிக்க, அன்று காலை முதலே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டிலிருந்து நிம்மதி தேடி எங்கோ போய்விட்டார் சூப்பர்ஸ்டார். காலை முதலே ரஜினி அவர் வீட்டில் இல்லையாம், ஒருவேளை மருத்துவமனையில் அட்மிட்டா..? என்று ஊடகத்துறையினர் பேசத் தொடங்கியபோது, இரவில் தனுஷ் – ஐஷ்வர்யாவின் பிரிவு அறிவிப்பு வந்தது. அப்போதுதான் ரஜினி வீட்டில் இல்லாமல் போனதன் காரணம் புரிந்தது.

திரைத் துறையிலும், குடும்ப வட்டாரத்திலும் உள்ள பெரியவர்களும், நண்பர்களும் ரஜினிக்காகவும், தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவுக்காகவும், தனுஷ் – ஐஷ்வர்யாவிடம் பலமுறை பஞ்சாயத்து பேசி வருகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

சமீபத்தில் தனுஷின் அடுத்த படமான மாறன் திரைப்படத்தின் முதல் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. “ஏய்.. இது பொல்லாத உலகம்.. நீ ரொம்ப ஷார்ப்பாய் இரு..’’ என்று தொடங்கும் படல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஜி.வியின் இசைக்காகவும், தனுஷின் வேகமான நடனத்துக்காகவும் மட்டுமல்ல, ரஜினி ஸ்டைல் வாழ்கை தத்துவங்களும் இடம்பெற இணையத்தை கலக்கி வருகிறது அந்தப் பாடல்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடலின் நடுவே வரும், ”ஏன் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா.. நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூமா..” என்ற வரிகள் தான். முதலில் பாட்டில் இந்த வரிகள் இல்லை என்றும் சமீபத்தில் தனுஷ் பாடலாசிரியர் விவேக்கிடம் இதுபோன்ற வரிகள் வேண்டும் என்று கேட்டு வாங்கி மீண்டும் பாடி ரிக்கார்டிங் செய்து கொடுத்ததாகவும் சொல்கிறார்கள் படக்குழுவினர்.

தனுஷ் தன் மனைவி ஐஷ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பி, அவருக்காக இதை செய்திருப்பதாக வெளியான தகவல், ரஜினியை நிம்மதியடைய வைத்துள்ளது. ”மாப்பிள்ளை சமாதானமாகிட்டார். இனி மகளையும் சமாதானப்படுத்திட்டா நல்லபடியா இருக்கும்” என்று நண்பர்களிடம் கண்கலங்கினாராம் ரஜினி.. தலைவா கபாலி ஸ்டைலில் சீக்கிரமே ‘மகிழ்ச்சி..’ன்னு சொல்லுவீங்க என்று எமோஷனாகின்றனர் ரசிகர்கள்..

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )