சிறுபாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாக பரவிவருகிறது.

கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான சிறுபாக்கம் அருகே உள்ள பனையாந்தூர் வள்ளிமதுரம். ஜா.ஏந்தல் பகுதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்வராயன் மலை பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்து படு ஜோராக விற்பனை நடைபெற்று வருகின்றது.
செல்போன் மூலம் தொடர்பு கொண்டால் பாக்கெட் சாராயம் வீட்டிற்கே வந்து டோர் டெலிவரி செய்யப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் வள்ளிமதுரம் கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு பாக்கெட் சாராயம் விற்பனை செய்யும் வீடியோ இப்பகுதியில் சமூக வலைதளங்களில் வைராலாக பரவிவருகிறது. கள்ளச்சாராயத் தால் உயிர் சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES கள்ளக்குறிச்சி
TAGS கள்ளச்சாராயம்கள்ளச்சாராயம் விற்பனைகள்வராயன் மலை பகுதிகுற்றம்சிறுபாக்கம்சிறுபாக்கம் காவல் நிலையம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பாக்கெட் சாராயம்முக்கிய செய்திகள்