சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படப்பை பகுதியில் மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாய விலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழாவினை சென்னையில் துவக்கி வைத்துள்ளார்கள்.
இதன் தொடர்ச்சியாக, நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படப்பை பகுதியில் மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாய விலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,19,33,342 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 35,684 நியாய விலைகடைகளில் ரூ.2 ஆயிரத்து 429 கோடி செலவில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படுகின்றது.
நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 3,93,204 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 667 நியாய விலைகடைகளில், ரூ.43 கோடியே 54 இலட்சம் செலவில் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படுகின்றது.
நமது தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை சொன்னதை சொன்னவாறு நிறைவேற்றி கொடுத்து கொண்டு இருக்கின்றார்.
அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரூ.2 ஆயிரத்து 531 கோடி மதிப்பிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரத்து 453 விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் ரூ.89 கோடியே 41 இலட்சம் தமிழகம் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடியாக தமிழகம் முழுவதும் 1 இலட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன், ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதனால் 15 இலட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயன் அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1,559 மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன், ரூ.37.75 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் 16,474 மகளிர் பயன் அடைந்துள்ளனர்.
மேலும், கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடியில், தமிழ்நாடு முழுவதும் 14 இலட்சத்து 60 ஆயிரம் ஏழை எளிய மக்கள் வாங்கிய ரூ.5 அயிரத்து 250 கோடி நகை கடன் தள்ளுபடியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ. 58.08 கோடி தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 18, 443 ஏழை எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன், காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்துக் கொண்டனர்.