BREAKING NEWS

சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு.

சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு.

சிவகங்கை 27வது வார்டில் நகராட்சி தலைவரும், ஆணையரும் ஆய்வு… சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 27வது வார்டில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையை சுற்றி அளவுக்கு அதிகமான குப்பைகளும் அதிகமான துர்நாற்றமும் வீசக்கூடிய நிலையில் இருந்து வந்தது.

 

 

உடனே நகராட்சி தலைவர் சி. எம். துரை ஆனந்த் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள கோழி கழிவுகளையும், குப்பைகளையும் அகற்ற தானே முன்வந்து, துப்புரவு பணியாளர்கள் மூலம் அந்த இடத்தை சுத்தம் செய்து அங்கு இருக்கும் கழிவு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தார். உடனே அந்த இடத்தை பார்வையிட்டார்.

 

 

உடன் சிவகங்கை நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகர் மன்ற உறுப்பினர்கள் விஜயகுமார்,ராமதாஸ், அயுப்கான்,மதியழகன், மற்றும் சமூக ஆர்வலர்கள் உடன் ஆய்வில் மேற்கொண்டு பார்வையிட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )