BREAKING NEWS

சிவசேனா கட்சி சார்பாக திமுக எம்.பி ஆ.ராஜா உருவ பொம்மை எறிக்க முட்பட்ட நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தேனியில் பரபரப்பு.

சிவசேனா கட்சி சார்பாக திமுக எம்.பி ஆ.ராஜா உருவ பொம்மை எறிக்க முட்பட்ட நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தேனியில் பரபரப்பு.

தேனி நேரு சிலை முன்பாக சிவசேனா கட்சி சார்பாக திமுக எம்.பி ஆ.ராஜா உருவ பொம்மை எறிக்க முட்பட்ட நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

 

 

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை முன்பாக சிவசேனா கட்சி மாநில செயலாளர் குரு ஐயப்பன் தலைமையில் நாமக்கல்லில் திமுகவின் சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நீலகிரி எம்.பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கூறி,

 

நீலகிரி எம்.பி ஆ.ராசா வை கண்டித்து தேனி பழைய பேருந்து நிலையம் முன்பாக தேனி மதுரை சாலையில் சிவசேனா கட்சியினர் ஊர்வலமாக வந்து நேரு சிலை முன்பாக ஆ.ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முற்பட்டனர்.

 

அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி உருவபொம்மையை கைப்பற்றிய நிலையில் சிவசேனா கட்சியினர் நேரு சிலை முன்பாக ஆ.ராஜாவை கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

 

இதனால் தேனி மதுரை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா கட்சியை சேர்ந்த 10-த்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )