BREAKING NEWS

சீத்தஞ்சேரி அருகே அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சீத்தஞ்சேரி அருகே அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் அம்மம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம். இந்த ஆலயம் அந்த இடத்தில் பல நூற்றாண்டுகளாக உள்ளது என கூறப்படுகிறது.

 

தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் விநாயகர் பிரார்த்தனை, மகா கணபதி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

 

இதை தொடர்ந்து சனிக்கிழமை சந்தி இரண்டாம் கால யாக பூஜை, விசேஷ திரவிய ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 11 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு அடுத்து கோபுர விமானங்களுக்கு விசேஷ பூஜைகளுடன் கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

11:30 மணிக்கு மூலவர் அருள்மிகு ஶ்ரீ செல்லியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்குதல் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மம்பாக்கம் மற்றும் செல்லியம்மன் கண்டிகை கிராம பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 

இதில் சுற்று வட்டார பகுதிகள் என்று ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

CATEGORIES
TAGS