சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..!
![சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..! சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் மரியாதை..!](https://aramseithigal.com/wp-content/uploads/2022/11/WhatsApp-Image-2022-11-18-at-1.47.23-PM-1-e1668763780203.jpeg)
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் வ உ சிதம்பரனார் நினைவேந்தல் கொடி கம்பம் கொடியேற்றி வ உ சிதம்பரனார் திருவுருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பனாரின் 86 ஆவது குருபூஜை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பனாரின் திரு உருவச்சலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி நகரம் சார்பில் வ.உ.சிதம்பரம் நினைவேந்தல் கொடி கம்பத்தில் கொடியேற்றி,..
வ.உ.சிதம்பனாரின் திருவுருவுச்சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் முருகன், வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், முன்னிலையில் வ உ சி சிதம்பனாரின் திருஉருவச்சலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் மாடசாமி,மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் விஜயா அந்தோணி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல் ராஜ்,அய்யனேரி முகாம் பொறுப்பாளர் ஆறுமுகம், நாலாட்டின்புத்தூர் முகாம் பொறுப்பாளர் மாரிசாமி,
கிளவிபட்டி முகாம் பொறுப்பாளர் செந்தூர் பாண்டி, உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்துகொண்டு வ உ சிதம்பனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.