செங்கம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் விவசாயிகள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வேளாண்மை அலுவலகத்தில் மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் திருவண்ணாமலை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த செங்கம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது விவசாயிகள் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் மாவட்ட துணை ஆட்சியர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து பின்னர் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாற்று தேதியில் நடத்தப்படுவதாக உறுதி அளித்த பின்னர் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்ற பின்னர் ஒவ்வொரு துறை அரசு அதிகாரிகளும் வந்த திரும்பிச் சென்றனர்.
விவசாயிகளின் குரு தீர்வு கூட்டத்தில் முறையாக அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளாததால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.