BREAKING NEWS

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி.. வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம், சாலைகள்..

செய்தியாளர் செங்கை ஷங்கர்.

 

செங்கல்பட்டில் மாண்டாஸ் புயல் எதிரொளி… அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்..

தமிழகத்தில் வங்காள விரிகுடா அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாண்டாஸ் புயல் உருவாகி உள்ளதை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று நாளை ஆகிய இரு நாட்கள் பலத்த புயல் காற்று மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய 390 பகுதிகளை கண்டறியப்பட்டு உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மேக மூட்டத்துடன் குளிர்காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. புயலின் எதிரொலி காரணமாக நேற்றிரவு இரவு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டது. 

ஏற்கனவே குளிர்காற்று வீசிவருவதாலும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிட்டிருப்

பதாலும் மக்கள் இன்று காலை முதல் வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கியதால் அனைத்து சாலைகளும் வெரிச்சோடி காணப்படுகிறது.

மேலும் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க 290 பாதுகாப்பு முகாம்களும்

 

மாண்டாஸ் புயலை எதிர்கொள்ள 134 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 80 ஜே.சி.பி-க்கள், 106 ஜெனரேட்டர்கள், மேலும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மின்சாரத் துறை, மீன்வளத்துறை, வேளாண் துறை மற்றும் காவல்துறை, தீயணைப்பு துறையினர் என அனைத்து துறைகளும் மாண்டாஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

 

அவசர உதவிகள் மற்றும் இடர்பாடுகள் குறித்த புகார்களை எளிதில் உடனுக்குடன் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அவசர கட்டுப்பாட்டு அறை (24×7 மணி நேரம்) தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸப் மூலம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )