செங்கல்பட்டு அரசு மறுவாழ்வு மைய தொழு நோயாளிகளோடு சிஆர்டிஎஸ் கிருஸ்துமஸ் விழா..

செய்தியாளர் செங்கைஷங்கர்.
கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் அரசு தொழுநோயாளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.

அவர்களோடு கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை செங்கல்பட்டு கிராமப்புற மேம்பாட்டு சங்கத்தின்
(சி.ஆர்.டி.எஸ்) சார்பில் அந்த மக்களோடு மக்களாக கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி கிருஸ்து பிறப்பு குறித்து அந்த மக்களுக்கு எடுத்துக்கூறிய சி.ஆர்.டி.எஸ் இயக்குநர் தந்தை முனைவர் அந்தோணிராஜ் மதிய உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி சாதி மத பேதமின்றி அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவ்விழாவில் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த தொண்டு நிறவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சி.ஆர்.டி.எஸ் பணியாளர்கள், தொழுநோயாளர் இல்ல ஊழியர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
CATEGORIES செங்கல்பட்டு
