செம்பனார்கோவில், ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆக்கூர் முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டு முத்து முனீஸ்வர கோவில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் முக்கூட்டு முத்து முனிஸ்வர கோவில் உள்ள.
இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
கடந்த 29ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 4 ஆம் காலயாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாரதனை நடைபெற்றது.
யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கோயிலை வளம் வந்து விமான மற்றும் இராஜகோபுரம் வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
மேலும் முத்து முனீஸ்வரன் சாமிக்கு சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது வெகு விமர்சியாக நடைபெற்ற இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.