செய்தியாளர்களை மரியாதை குறைவாக நடத்தும் தனியார் விளம்பர ஏஜென்ட் சுப்பையா!

வேலூரில் தனியார் விளம்பர ஏஜென்ட்டாக பணியாற்றி வருபவர் சுப்பையா. இவர் குறிப்பாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம், ஸ்ரீ நாராயணி குழுமம் சார்பில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி, நர்சிங் கல்லூரி மற்றும் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவைகள் வெளியிடும் விளம்பரங்களை அனைத்து நாளிதழ்களுக்கும் கொடுக்கும் பணியை சுப்பையா செய்து வருகிறார்.
இவர் செய்தியாளர்களிடம் எப்போதும் தெனாவெட்டாக நடந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சுப்பையாவை தொடர்பு கொண்டு செய்தியாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையான சந்தேகங்களை கேட்டால் கூட ஓரிரு நிமிடங்களில் தொலைபேசி இணைப்பை துண்டித்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த பலே சுப்பையா என்று சொன்னால் அது மிகையாகாது. அத்துடன் செய்தியாளர்களை மரியாதை குறைவாக நடத்துவதை இவர் வழக்கமான ஒன்றாக கொண்டுள்ளார்.
இத்துடன் இவரது பவர் குறைந்து போவது இல்லை. இவரது கைப்பிடியில் உள்ள தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வாரி கொடுப்பது ஏன் வழக்கமாகக் கொண்டுள்ளார் இந்த சுப்பையா குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் தனியாக செய்தியாளர்களிடம் கமிஷன் கேட்பது வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
அத்துடன் சில பத்திரிகைகளுக்கு ஒரு ரேட் சில பத்திரிகைகளுக்கு ஒரு ரேட் என்று தரம் பிரித்து இவராகவே தன்னிச்சையாக செயல்படுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இது அந்த தனியார் நிறுவனங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லலாம்.
இது போன்ற அதிர்ச்சி தகவல்கள் சுப்பையாவின் செயல்பாட்டில் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏதோ நிறுவனங்கள் விளம்பரம் கொடுக்கிறது என்றால் இவர் இடையில் புகுந்து இவர் ஏதோ முதலாளி போல நடந்து கொள்வது செய்தியாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.
இதை அந்த தனியார் நிறுவனங்கள் புரிந்து கொண்டு இது போன்ற ஏஜெண்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு நேரடியாக அந்தந்த பத்திரிகை அலுவலகங்களை தொடர்பு கொண்டு விளம்பர பிரிவை நாடிச் சென்று விளம்பரங்களை கொடுத்து தங்களது வியாபாரங்களை பெருக்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்பது செய்தியாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த தனியார் நிறுவனங்கள் இப்போது இருக்கும் நிலையை மாற்றி புதிய பாதையை தேர்வு செய்வார்களா? அல்லது பழைய பாதையிலே நாங்கள் பயணிக்கிறோம் என்று சுப்பையாவை பிடித்துக் கொண்டு வலம் வரப்போகிறார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்