BREAKING NEWS

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.

சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உணவு துறை செயலாளர் எச்சரிக்கை.

 

தஞ்சை,

 

நெல் கொள்முதல் நிலையம், சேமிப்பு கிடங்கு, ரேஷன் கடைகளில் உள்ள கருப்பு ஆடுகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் அளித்த பேட்டியில் எச்சரித்துள்ளார்.

 

தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி நுகர் பொருள் வாணிப கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

 

பின்னர் அவர் அளித்த பேட்டியில் தமிழகத்தில் 722 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு தற்போது வரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

தஞ்சை மாவட்டத்தில் 268 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 45 ஆயிரத்து 97 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பக்கத்து மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க,

 

 

ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன் நெல் கொள்முதல் நிலையம் சேமிப்பு கிடங்கு ரேஷன் கடைகள் உள்ளிட்ட இடங்களில் சில கருப்பு உள்ளது. 

 

 

இது குறித்து விரைவாக வரும் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )