சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் விசாரணை.

ஆத்தூர் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் சதீஷ் (26) சென்னையில் இருந்து சேலம் செல்லும் விரைவு ரயில் மோதி விபத்து உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் பலி ரயில்வே போலீசார் விசாரணை,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் தமிழரசன் நகரை சேர்ந்தவர் மணி மகன் சதீஷ்(26) இவர் அதிகாலையில் 5 மணிக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்ற போது,

சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அதிகாலை விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டதில் 500 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறிய நிலையில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ரயில்வே மற்றும் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
