சோலார் வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்கும் போது உதவி வனப்பாதுகாவலரை தாக்கியது.

தேனி மாவட்டம் தேனி வனக்கோட்டம், மற்றும் வனச்சரகம், வரட்டாறு போடி வடக்கு மலை காப்பு காடு அடிவாரம் பெரியகுளம் வட்டம், தென்கரை கைலாசநாதர் கோவில் பகுதி தனியார் தோட்டத்தின் அருகில் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
சிறுத்தையினை உதவி வனப்பாதுகாவலர் அவர்கள் மற்றும் சரக வனப் பணியாளர்களுடன் உயிருடன் மீட்க்கும் பணியில் ஈடுபடும் போது சிறுத்தை சோலார் கம்பி வேலியில் இருந்து தானாக விடுபட்டு உதவி வனப்பாதுகாவலர், மகேந்திரனை சிறுத்தை தாக்கிவிட்டு வனப் பகுதிகுள் உயிருடன் சென்று விட்டது.
சிறுத்தை தாக்கியதில் உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் காயத்துடன் தேனி தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுத்தையை மீட்கும் பணியில் தேனி வனச்சரக அலுவலர், தேனி பிரிவு வனவர் மற்றும் வனக்காப்பாளர் வன ஊழியர்கள் உடனிருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.