சோளிங்கர் நாரைக்குளமேடு தேவி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளானோர் தரிசனம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வார்டு நாரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி யாக பூஜை கலசபூஜை செய்து மங்கள வாத்தியங்களுடன் சிவாச்சார்யர்கள் ஊர்வலமாக சென்று பூஜிக்கப்பட்ட புனித நீரை கோபுர கலசத்திற்கும் பரிவார மூர்த்திகளுக்கும் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம்,
முன்னாள் எம்பி சி.கோபால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.G. பார்த்திபன், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, திமுக செயற்குழு உறுப்பினர் அசோகன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சி உறுப்பினர்கள் அன்பரசு, மோகனா சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.