ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நேற்று கல்லூரிப் பேரவை துவக்கவிழா மற்றும் ஆசிரியர் தின விழா தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் இராணி வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவர்கள் ஆசிரியர்கள் பற்றிய தங்கள் கருத்துகளைக் கூறினர். கல்லூரி முதல்வர் முனைவர் இரமேஷ் தலைமை வகித்து பேரவையை துவக்கி வைத்தார்.
அவர் தனது தலைமையுரையில் கல்லூரியின் பேரவைகளை முதல்வர் மாணவர்கள் தங்களின் எதிர்கால இலக்காக தங்கள் ஆசிரியர்களை நினைவில் கொண்டு நல்ல முறையில் முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதனைத்தொடர்ந்து அனைத்துத் துறைத் தலைவர்களும் தங்கள் கருத்துகளை வாழ்த்துரையாக எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் இராசமூர்த்தி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பவானி தொகுத்து வழங்கினார். இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் முனைவர் வடிவேலன் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார். விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.