`ஜெயலலிதாவைப் போல ஈபிஎஸ், வேலுமணி விரைவில் சிறைக்கு செல்வார்கள்’- அதிரடி கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி!

“திமுக கொடுத்த புகார் பட்டியலில் உள்ள அத்தனை குற்றச்சாட்டுகளையும் நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். பட்டியலில் உள்ள அத்தனை பேரும் உள்ளே சென்றார்கள். சிலர் தண்டனை பெற்றுவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விரைவில் சிறைக்குப் போவார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கண்டெய்னர் லாரியில் 570 கோடி ரூபாய் பிடிபட்டது. அந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. வழக்கு விசாரணை 6 வருடங்களைக் கடந்த நிலையிலும், இதுவரை அந்தப் பணம் யாருடையது என்பதை சிபிஐ கண்டுபிடிக்கவில்லை. அந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும். அப்போது யாருடைய பணம் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும். 1995-ம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்கள் மீது கருணாநிதி கொடுத்த பட்டியலில் கொடுக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம்.
அத்தனை பேரும் உள்ளே சென்றார்கள். சிலர் தண்டனை பெற்றுவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை வழக்கு விசாரணைக்கு வரும். உள்ளே போக வேண்டியவர்கள் உள்ளே போவார்கள். எஸ்.பி வேலுமணி வழக்கு, கோடநாடு கொலை வழக்கு என அனைத்து வழக்குகளின் முடிவையும் விரைவில் காணலாம்” என்றார்.
CATEGORIES Uncategorized
