டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை.

டி.டி.வி. தினகரன் டிஸ்சார்ஜ், 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள பரிந்துரை..மீனாட்சி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா பேட்டி.

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 1-ம் தேதி வயிற்று வலி ,வாந்தி, நீர்சத்து குறைபாடு காரணமாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இன்று அவர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் 10 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மருத்துவர் பிரசன்னா கூறினார்.
CATEGORIES தஞ்சாவூர்
