BREAKING NEWS

தஞ்சாவூரில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி, 350 வீரர்கள் பங்கேற்பு.

தஞ்சாவூரில் மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி, 350 வீரர்கள் பங்கேற்பு.

 

தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது, மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சீனியர் ஜீனியர், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகின்றன.,

 

 

17 வயதுக்கு உட்பட்டோர், 20 வயதுக்குட்பட்டோர், மற்றும் 20 வயதுக்கு மேற்பட்டோர் என போட்டிகள் ஸ்னாட்ச், மற்றும் ஜெர்க் ஆகிய இரு பிரிவுகளில் நடைபெறுகிறது.

 

 

 

இப்போட்டிகளில் உடல் எடை பிரிவு பெண்களுக்கு 40 கிலோ முதல் 87 கிலோ மேல் வரையும் மற்றும் ஆண்களுக்கு 49 கிலோ முதல் 109 கிலோவிற்கு மேல் எடை வரையும் என போட்டிகள் நடைபெறுகிறது.

 

 

இப்போட்டிகளில் அதிக எடை தூக்குபவர்கள் சாம்பியனாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இதில் திருச்சி கோவை மதுரை திருவாரூர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பளு தூக்கும் வீரர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )