தஞ்சாவூர் அருகே உணவில் விஷம் வைத்து நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

உணவில் விஷம் வைத்து ஏழு நாய்களை கொன்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே துவரங்குறிச்சி கீழக்காடு பகுதியில் இன்று ஏழு நாய்கள் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்துள்ளன.

இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் நாயை பரிசோதித்த போது நாய்கள் உண்ட உணவில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து ஏழு நாய்கள் துடிதுடித்து சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தன.


நாய்களுக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்ற மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்
