தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் சார்பாக புனித அன்னை தெரசாவின் 112-வது பிறந்தநாளை முன்னிட்டு விரிவுபடுத்தப்பட்ட மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல் தளம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) திறப்பு விழா

புனித அன்னை தெரசாவின் 112வது பிறந்த நாள்
விழாவை முன்னிட்டு மதர் தெரசா ஹெல்த் சென்டரின் முதல்தளம் விரிவுபடுத்தப்பட்டு
அதில் உள் நோயாளிகள் தங்குவதற்கான குளிரூட்டப்பட்ட அறைகளும், அனைத்து உயிர்
காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் (ICU) புதிதாக
துவங்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கம் நவீனபடுத்தப்பட்டுள்ளது. இன்று முதல்
24 மணிநேரமும் இயங்கக்கூடிய நிலையிலுள்ள இதனை தஞ்சாவூர் பாரத ஸ்டேட் வங்கியின்
மண்டல மேலாளர் திரு. A. ஆல்வின் மார்டின் ஜோசப் அவர்கள் திறந்து வைத்து
பவுண்டேசன் ஆற்றிவரும் சேவைப் பணிகளைக் குறித்தும் குறிப்பாக அதிநவீன முறையில்
செய்துவரும் மருத்துவப் பணிகளை குறித்தும் பெரிதும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு பவுண்டேசன் சேர்மென் சவரிமுத்து
அவர்கள் தலைமை தாங்கினார்.
அறங்காவலர் சம்பத் ராகசவன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் கோவிந்தராஜ் நன்றி
கூறினார். தஞ்சையைச் சார்ந்த பிரபல மருத்துவர்களும், தொழிலதிபர்களும் இந்நிகழ்ச்சியில்
கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட
மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, ரேணுகா மற்றும் திட்ட
ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ்வரன்,சூசைராஜா, கிறிஸ்டி, வர்ஷினி, ஷர்மிளா, ஹெல்த்
சென்டர் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.