தஞ்சையில் ஐஸ்கிரீம் மொத்த வியாபாரக் கடையில் தீ விபத்து சுமார் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் நாசம்.

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் வெங்கடேசா பவனம் எனும் பயணிகள் தங்கும் விடுதி கட்டிடத்தின் கீழ் பகுதியில் ஹட்சன் அக்ரோ பிராடக்ட் நிறுவனத்தின் ஐஸ்கிரீம் மொத்த விற்பனை நிலையத்தில் இன்று மாலை திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் ஐஸ்கிரீம்கள் வைத்துருந்த 10 க்கும் மேற்பட்ட ப்ரீஸர்கள் முற்றிலும் எரிந்ததால் புகைமூட்டமானது.

தகவல் தெரிந்ததையத்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்துகொண்டுருந்த தீயை அணைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டன.

தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
