BREAKING NEWS

தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த

தஞ்சையில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை: ம்பவ இடத்திலேயே உயிர் இழந்த

தஞ்சையில் பிரபல இளம் கஞ்சா வியாபாரி கொடுரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கஞ்சா கேட்டு வந்த 3 பேரை கொடுவாளால் வெட்டி விரட்ட முயன்ற கஞ்சா வியாபாரிடம் இருந்து கொடுவாளை பறித்து கொடுரமாக வெட்டி கொலை செய்தனர். காயம் அடைந்த கொலையாளிகள் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

தஞ்சை ராஜாராம் மடத்தெருவில் வசித்து வருபவர் பிரதீப். 24 வயதான இவர் வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. பிரதீப் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குகள் உள்ள கொண்டி ராஜா பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார், குளத்துமேட்டுத் தெருவை சேர்ந்த விக்னேஷ், சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த சூர்யா இவர்கள் மூன்று பேரும் பிரதீப் வீட்டிற்கு சென்று கஞ்சா கேட்டதாக கூறப்படுகிறது.

 

 

இதில் கஞ்சா இல்லை என கூறி பிரதீப் வீட்டில் இருந்து கொடுவாளை எடுத்து வந்து 3 பேரையும் வெட்டியதாக சொல்லப்படுகிறது.அந்த நேரத்தில் சுதாரித்துக்கொண்ட 3 பேரும் பிரதீப்பிடம் இருந்து கொடுவாளை பறித்து சரமாரியாக பிரதீப்பை வெட்டி படுகொலை செய்தனர்.

 

 

ரத்தவெள்ளத்தில் கிடந்த பிரதீப் உடலை மீட்ட கிழக்கு காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கஞ்சா வியாபாரி பிரதீப் வெட்டியதில் காயம் அடைந்த சிவக்குமார், விக்னேஷ் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தப்பி ஓடிய சூர்யாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சையில் கஞ்சா வியாபாரம் தலைவிரித்து ஆடுவதாக சமுக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் காவல்துறையினர் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS