BREAKING NEWS

தஞ்சையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிபிஎஸ் ஒலிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

 

 

அரசு தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை சேர்ந்த சரவணன் வரவேற்புரை ஆற்றினார் செயலாளர் முருகேசன் விளக்கவுரை மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் துவக்க உரையாற்றினார்.

 

 

முக்கிய தீர்மானங்களாக வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான் ஜார்கண்ட் சட்டீஸ்கர் மாநிலங்களில் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டது போல் திமுகவின் தேர்தல் கால வாக்குறுதி படி தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரியும் மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் பணிபுரியும் சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க கோரியும் உண்ணாவிரதம் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் துளசி நிறைவு உரையாற்றினார் வட்ட பொருளாளர் குமார் நன்றி உரை ஆற்றினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )