BREAKING NEWS

தஞ்சையில் சோழநாட்டுப் பட்டாளம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான அணிவகுப்பு.

தஞ்சையில் சோழநாட்டுப் பட்டாளம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான அணிவகுப்பு.

தஞ்சையில் சோழநாட்டுப் பட்டாளம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான அணிவகுப்பினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். 

 

போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,

 

 

சோழமண்டல பட்டாள அமைப்பினை சார்ந்த முன்னாள், இந்நாள் முப்படை மற்றும் துணை ராணுவ வீரர்கள் 50 பேர் தஞ்சாவூர் புகைவண்டி நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அணிவகுத்து சென்றனர்.

 

இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா இ.கா.ப, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் மேஜர் திரு. சரவணன், கலால் உதவி ஆணையர் திரு. பழனிவேல்,

 

 

தஞ்சாவூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜா, வட்டாட்சியர் திரு. மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன், ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் திரு. முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )