தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு. போலிசார் விசாரணை.

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செயின் பறிக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பாத்திமாநகரை சேர்ந்தவர் பெலிக்ஸ். இவரது மனைவி சாலட்மேரி (63). இவர் சம்பவத்தன்று ஆட்டோவில் கடைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
வீட்டின் அருகே சென்ற போது பின்னார் பைக்கில் வந்த மர்மநபர்கள் 2 பேர் சாலட்மேரி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீசில் சாலட்மேரி புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் செயின் பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
