தஞ்சை அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம், இயற்பியல் ஆய்வுக் கூடம் சுமார் ரூ.1 கோடி மதிப்பில் கட்டுவதற்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் அடிக்கல் நாட்டினார்

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் நம்ம வார்டு நம்ம மேயர் என்ற தலைப்பில் மேயர் சண். ராமநாதன் மக்களை தேடி குறைகளை கேட்டு அதனை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில் அரசு பள்ளி புதிய கட்டிடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், கழிவறைகள் கட்டுதல், பழுதான கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட அடிக்க நாட்டுதல் போன்ற பல்வேறு பணிகளை மேயர் சண். ராமநாதன் செய்து வருகிறார். அந்த வகையில் தஞ்சை அண்ணா நகர் அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆய்வுக்கூடம் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை உடனே பரிசீலனை செய்து இரண்டு கட்டிடங்களும் கட்டுவதற்கு சுமார் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பள்ளிக்கு புதிதாக இயற்பியல் ஆய்வு கூடம் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது
. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, உதவி பொறியாளர் போஸ் என்கிற சந்திரபோஸ், சுகாதார ஆய்வாளர் மோகன பிரியதர்ஷினி, கவுன்சிலர்கள் உஷா, ரம்யா சரவணன், வட்டச் செயலாளர் காளையார் வக்கீல் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ராசி கேட்டரிங் ராஜா, மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இயற்பியல் ஆய்வு கூடம் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டுவதற்கான அடிக்கல்லை மேயர் சண். ராமநாதன் நாட்டினார். முன்னதாக அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
