தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும் – மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் பேட்டி.

பூர்வீக தமிழர் குடியாட்சி அமைப்பின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தஞ்சை பெருவுடையார் கோவில் சொத்துக்களை தமிழக அரசு மீட்டு எடுக்க வேண்டும், குறிப்பாக தமிழகத்தில் சுமார் இரண்டு லட்சம் கோடி கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்டு கோயில் இடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும், குல தொழிலான உழவர் தொழிலை மீட்டெடுத்து வறுமையை போக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் குருநாதர், பாலா சதானந்தன், கார்மேகம், ஜெபக்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.