BREAKING NEWS

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

தமிழக அரசு மாற்றுதிறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சன்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் மாதத்தில் முதல் புதன்கிழமை திருவள்ளூரிலும் 2வது புதன்கிழமை திருத்தணியில் 3வது புதன்கிழமை பொன்னேரியிலும் 4வது புதன்கிழமை ஆவடியில் ஆகிய பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது

இந்த
சிறப்பு மருத்துவ முகாமில், மருத்துவச்சான்று வழங்குதல், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு மற்றும் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன
மேலும்
இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆனால் மருத்துவமனையில் போதிய டாக்டர்களும் மாற்றுத்திறனாளிக்கான அடிப்படை வசதிகளான
சக்கரம் நாற்காலி இருக்கை வசதி போதிய அளவில் வழங்காததால் மாற்றுத் திறனாளிகள் தரையில் அமர்ந்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

 

நிர்வாக காரணங்களுக்காக கடந்த மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்று வழங்கும் நடைபெறாமல் இருந்ததால் இந்த மாதம் நடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் வரக்கூடும் என தெரிந்தும் போதிய ஏற்பாடுகளை செய்யாமல் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அடுத்ததாக நடைபெறும் முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.https://youtu.be/1coWVnkiqng

CATEGORIES
TAGS