BREAKING NEWS

தமிழக முதல்வர் அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த எம்எல்ஏ,மேயர் அரசு அதிகாரிகள், மற்றும் திமுகவினர்.

தமிழக முதல்வர் அரசு நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்த எம்எல்ஏ,மேயர் அரசு அதிகாரிகள், மற்றும் திமுகவினர்.

தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான காமராஜ் மார்க்கெட் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் ரூ 20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மூலம் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 

 

 

இதனை காலை 10 மணிக்கு தமிழக முதல்வர் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்வர் நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தற்போது தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பொது வெளியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

 

அரசு நிகழ்ச்சியை கண்டு கொள்ளாமல் படத்தை எம்எல்ஏக்கள் நீலமேகம், சந்திரசேகரன் தஞ்சை மேயர் ராமநாதன் மற்றும் திமுகவினர் பொதுமக்கள் அமர்ந்து திரைப்படம் பார்த்து வருகின்றனர்.

 

 

இதனால் அரசு நிகழ்ச்சியில் நலத்திட்டங்களை தெரிவிக்காமல் திரைப்படம் பார்ப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )