தமிழ்நாடு முதல்வர் வாக்குச்சாவடி முகவர்கள் (BLA2) உடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி (BLA-2) முகவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் கலந்துரையாடும் கூட்டம் 12-11-2022 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஜோலார்பேட்டை ஸ்ரீராஜராஜேஸ்வரி திருமண மஹாலில் காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில்,
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA., திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன்,
ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி, கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சி.சத்தியமூர்த்தி,
பொதுக்குழு உறுப்பினர்கள் சாம்மண்ணன், சத்தியநாராயணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட கவுன்சிலர்கள் சிந்துஜா, ஜெயாசுந்தரேசன், மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் கழக முன்னோடிகள், வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டார்கள்.