தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன்க்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது கிராம எல்லையில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மடத்தெருவில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் புள்ள அம்மனுக்கு ஊர்மக்கள் தன் கைகளால் பால் அபிஷேகம் செய்து பக்தி பரவசமடைந்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக 10 வார்டு மாமன்ற உறுப்பினர் ரமேஷ் தேமுதிக மாவட்ட பொருளாளர் ஜேசிபி சுரேஷ் கலந்து கொண்டனர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமான ஸ்ரீ மாரியம்மன் வணங்கி ஆசி பெற்று சென்றனர்.
CATEGORIES ஆன்மிகம்
TAGS காங்கேயநல்லூர் கிராமம்தமிழ் புத்தாண்டு விழாதமிழ்நாடுதலைப்பு செய்திகள்பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடுமுக்கிய செய்திகள்வேலூர்வேலூர் மாவட்டம்ஸ்ரீ மாரியம்மன்