தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி திமுக பேரூர் கழக செயலாளர் முத்துராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு,
தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல் மாலிக், பி.எம்.அன்பழகன், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பால.அருள்செல்வன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி,
மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: பொறையாரில் தரங்கம்பாடி திமுக பேரூர் கழக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தபோது.
