தலைப்பு செய்திகள்
திருச்சி அருகே முட்டை லாரியில் ஆவணம் இல்லாத ரொக்கம் ரூ1.85 லட்சம் பறிமுதல் – தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தொட்டியம் தாலுகாவில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள
காட்டுப்புத்தூர் பகுதியில் பறக்கும்படை அலுவலர் உமாராணி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியே முட்டை லாரி ஒன்று வந்துள்ளது.
அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தவநிலவன் என்பவரிடம் ரூபாய்
1லட்சத்தி 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம்
இருந்துள்ளது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து முசிறி கோட்டாட்சியர் மாதவனிடம் ஒப்படைத்தனர். அவரது வழிகாட்டுதலின்படி பணம் சரிபார்க்கப்பட்டு தொட்டியம் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முட்டை லாரியிலிருந்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.