தலைப்பு செய்திகள்
வாணியம்பாடி நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா.
எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட தும்பேரி, திம்மாம்பேட்டை, அம்பலூர் உள்ளிட்ட பல இடங்களில் வாணியம்பாடி நகர கழக செயலாளர் சதாசிவம் மற்றும் நற்றம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்ட கழக முக்கிய நிர்வாகிகள் எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை ,எளிய மக்களுக்கு பிரியாணி, அன்னதானம் வழங்கினார்.
CATEGORIES திருப்பத்தூர்