தலைப்பு செய்திகள்
பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம் .
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. அரசு ஆண்டுக்கு, 40 ஆயிரம் விவசாய இணைப்புகள் வழங்க அனுமதிக்கிறது. அதில், 70 சதவீதம் வரை வழங்கப்படும். இதற்கு, மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதே முக்கிய காரணம்.
சட்டசபை தேர்தலால், 2020 – 2021ல் 50 ஆயிரம் விவசாய இணைப்பு அனுமதிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021 செப்டம்பரில் துவக்கி வைத்தார். இதுவரை, 52 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் நகர்ப்புறத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம் எனவும் அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய, கோவை அதிமுகவின் கோட்டை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை. கோவை இனி முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோட்டைதான். முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றுள்ளது, என கூறினார்.