BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி.

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி – தமிழக முதல்வர் தான் மா விவசாயிகளை காக்க வேண்டும் என கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா சாகுபடி பாதிப்பு குறித்து ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விவசாயிகள் வருகை புரிந்தனர் ஆனால் ஆட்சியரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே கண்டன கோஷம் எழுப்பினர்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மா விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக பூச்சி தாக்குதல் மற்றும் வறட்சியால் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர் அந்த அடிப்படையில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆகவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் இழப்பை சந்தித்து வரும் மா விவசாயிகளை காக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )