BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் மேயர், துணைமேயர் உள்ளிட்ட பதிவிகளுக்கு நடைப்பெற உள்ள மறைமுக தேர்தலில் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மேயர், துணைமேயர் உள்ளிட்ட பதிவிகளுக்கு நடைப்பெற உள்ள மறைமுக தேர்தலில் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேட்டி.

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்
மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்
தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் ரபீக் அகமது, அப்துல் ஹமீத், உமர் பாரூக் உட்பட நிர்வாகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெல்லை முபாரக் .

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 1மாநகராட்சி 17பேரூராட்சி,
8நகராட்சி பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ கட்சி
வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் பண விநியோகம் , பரிசுப்பொருட்கள் விநியோகம் வெளிப்படையாகவே நடைப்பெற்றது. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி பிரிவாக செயல்பட்டது
பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் தடுக்க வில்லை .

எங்களது மற்றும் எதிர் கட்சி கொடுத்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை . இது கண்டனத்துக்குரியது தேர்தல் முறைகேடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்மாதம் 4ம் தேதி மேயர், துணைமேயர் உள்ளிட்ட பதிவிகளுக்கு நடைப்பெற உள்ள மறைமுக தேர்தலில் நடைப்பெறும் குதிரை பேரத்தை தடுக்க வேண்டும்.

உக்ரேன் மீது ரஷ்யா நடத்தும் போரை தடுக்க வேண்டும். வல்லரசு நாடுகள் தலையீட வேண்டும்.
இந்தியா மாணவர்களை மீட்க
ஒன்றிய அரசும் மாநில அரசும் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை நந்தனத்தில் நடைபெறம் புத்தக கண்காட்சியில் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழா புகைப்படம் கண்காட்சி அமைந்துள்ளது, அதில் உண்மையான சுதந்திரத்தில் ஈடுபட்ட வீரர்களுடன் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்த ஆர்.எஸ்.எஸ் இந்துதுவ அமைப்பின் சேர்ந்தவர்களின் புகைப்படங்களை உட்படுத்தி அறியப்படாத போராட்ட வீரர்கள் என்ற போலியான பிம்பத்தை கட்டமைக்க ஒன்றி அரசு முயற்சி செய்கிறது. இதனை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும்.

தமிழத மீனவர்கள்
80 பேர் சிறைபிடிக்கப்பட்டு அவர்களின் படகுகள் ஏலம் விடப்படுகிறது.
இது இந்தியாவின் இறையாண்மையை ஏலம் விடுவதாகும் .
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தும் வகையில் இலங்கை மீதான போர் கால நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்த வேண்டும்.

கூடங்குளத்தில் அனுகழிவுகளை வளாகத்திற்குள் புதைக்கும் நடவக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

38 சிறைவாசிகள் அப்பாவிகள். அவர்களுக்கு பரோல் கூட வழங்க வில்லை. பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் போல இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவர்கள்
28 வருடங்கள் சிறையில் உள்ளனர். தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றாமல் கமிஷன் போடுவது தேவையற்றது. இது குறித்து தமிழக முதல்வர் பரிசீலீக்க வேண்டும்.

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 266 இடங்களில் எஸ்டிபிஐ கட்சி வெற்றி பெற்று 0.70 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம். மக்கள் எங்களை ஏற்கத் தொடங்கி உள்ளனர். என தெரிவித்தார்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )