தலைப்பு செய்திகள்
ரஷ்யா குண்டு வீச்சால் இந்திய மாணவன் நவீன் பலி.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான 5-வது நாளான இன்று கடும் போர் நிலவி வருகிறது. இதில் உக்ரேனில் இந்திய நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் மற்றும் குடி பெயர்ந்தவர்கள் சிக்கிக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து இந்தியாவை சேர்ந்த மக்களை உக்ரைனில் இருந்து மீட்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நேற்றைய தினம் இண்டிகோ நிறுவனம் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை காப்பாற்றும் வகையில் இரண்டு விமானங்களை உக்ரேன் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.இந்த விமானம் மூலம் இந்தியர்களை தாயகம் கூட்டி வர மத்திய அரசு முனைப்பில் செயல் பட்டு இருந்தது.
நேற்றைய தினம் சுமார் 5 விமானங்கள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை உக்ரேனில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக உக்ரைனில் இன்னும் மாணவர்கள் சிக்கி தவித்துக் கொண்டு பல வீடியோ காட்சிகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
இன்று அதிகாரப்பூர்வமாக இந்திய வெளிதுறை தகவல் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவன் கார்கிவ் நகரில் குண்டு வீசப்பட்டதால் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவன் இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்துள்ளது. கார்கிவ் நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையத்திற்கு செல்லும் போது குண்டு தாக்குதலில் மாணவன் நவீன் உயிரிழந்துள்ளதாக வரித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.