BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

நம்ம நாகர்கோவில்’ என்ற பெரிய அளவிலான பதாகை மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி அண்ணா சிலை அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த ‘நம்ம நாகர்கோவில்’ என்ற பெரிய அளவிலான பதாகை மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது-நம்ம நாகர்கோவில் அலங்கார பதாகையை புகைப்படம் எடுக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

‘நம்ம நாகர்கோவில்’முழுமையான பணிகள் முடிந்த பின்பு முதல் மேயர் கரங்களால் திறக்கப்பட உள்ளதாக தகவல்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமாக நாகர்கோவில் விளங்கி வருகிறது,தற்போது நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் தேர்தல் முடிந்துள்ள நிலையில் மாநகராட்சியின் சார்பில் வடசேரி அண்ணா சிலை அருகில் ‘நம்ம நாகர்கோவில்’ என்ற பெரிய வடிவிலான அலங்கார பதாகை நிறுவப்பட்டது,அதனைத் தொடர்ந்து அவ்வழியே சாலையில் வாகனத்தில் செல்பவர்களும், பொதுமக்களும்,இளைஞர்களும்,மாணவ மாணவிகளும் அங்கு கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து செல்பி,புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வந்தனர்.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட அளவில் சமூக வலை தளங்களான முகநூல்,வாட்ஸ்ஆப் போன்ற இணைய பக்கங்களில் நம்ம நாகர்கோவில் டிரண்டிங் ஆனாது,இந்நிலையில் தற்போது ‘நம்ம நாகர்கோவில்’ என்ற பதாகை மூடப்பட்டு உள்ளதால் புகைப்படம் எடுத்துக்கொள்ள வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர்,இதனால் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,மேலும் இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது ‘நம்ம நாகர்கோவில்’ என்ற அலங்கார பதாகை முழுமையான பணிகள் இன்னும் முடிவடையாததாலும் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்,மேலும் மாநகராட்சி மேயர் பதவி ஏற்ற பின்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,இன்னும் ஓரிரு நாட்களில் ‘நம்ம நாகர்கோவில்’ புதுப்பொலிவுடன் அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திறக்கப்பட இருக்கிறது,எனவே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்,கடந்த மூன்று நாட்கள் பரபரப்பாக காணப்பட்ட நம்ம நாகர்கோவில் பகுதி தற்போது மூடப்பட்டு உள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது,இதனால் இச்சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )