தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூத புரீஸ்வரர் ஆலயத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூத புரீஸ்வரர் ஆலயத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.இதில் பரதநாட்டிய விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூத புரீஸ்வரர் சிவன் கோயிலில் மஹாசிவராத்திரி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவபெருமானை தரிசித்து வணங்கி வழிபட்டனர். இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் பரதநாட்டிய மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய விழாவை பக்தகோடிகள் கண்டுகளித்தனர்.

சிவராத்திரியை முன்னிட்டு இரவு 10 மணியளவில் முதல்கால பூஜையும், இரவு 11 மணியளவில் இரண்டாம் கால பூஜையும், இரவு 1 மணியளவில் மூன்றாம் கால பூஜையும், அதிகாலை 3.30 மணியளவில் நான்காம் கால பூஜையும் நடைபெற உள்ளது. இந்த மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
CATEGORIES காஞ்சிபுரம்
