BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வெளியானது `எதற்கும் துணிந்தவன்’ மாஸ் டிரெய்லர்

 

சூர்யா மிரட்டலில் உருவாகியிருக்கும் `எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10-ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யா படம் என்பதால், எதற்கும் துணிந்தவனுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது இதன் ப்ரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )